Mr.Kasi.Jeevalingam’s Personal Information

Mr.Kasi.Jeevalingam share his Knowledge, Skill, and Experience through the online solutions.
பதிவுகள் யாவும் நானறிந்த ஆங்கிலத்தில் தொடங்கினாலும் என் தாய் மொழியில் முழுமையாகத் தந்துள்ளேன்.

My Dear Visitors

I am Jeevalingam, Mathagal East, Jaffna District, Northern Province, Sri Lanka. I know Psychology, Guidance & Counselling, Journalism, IT, System Analyzing & Designing, Web & Software developing, and more. But, I am not completed any degree courses. Actually I learnt little knowledge in variety of subjects. I learnt my small finger nail size wisdom while I need to learn word size wisdom.

My mother language is Tamil. But, I know English and Sinhala. I am publishing my knowledge, skill, and experience through the internet. You can check my blogs or web and refer to your friends. You find out any faults from me or my resources when immediately you can send your condemn, comment, correction, guidance, and counselling to me. Always I accept your all requests.

I want be introduce myself to you by this web site. Why very important of personal information? Commonly each one’s information seeks by others that they want to be making love or friendship and or married purpose. Actually VIP seeks (Very Important Person: Judges, Lawyers, Police, Doctors, and Teachers like some ones who care others.) some one’s information for their purpose.

Whoever read my blogs or my yarlsoft solutions website then they interest to know myself. So, I want to share my little information that you may be believed me either you can be trust with me. Psychologically tells, first impression is best impression. So, I am interpreting my heart news or mind views to you that help to you for make any relationship with me.

I share my little information that I will take a higher position of my career or I will build my good society. Always everybody depend on his/her society. Always society is guiding every ones bright future. Anyone can believe me when they can be collaborated with me. When higher educated body (They kept qualification than me) read my personal information, they can correct my missed faults and guide or teach to me for my development. It is help to my future progress.

When my classmates or my friends read my personal information, they can remember to me and interpret to others. Their help is my feedback for my duties or services. You know little size of me from read this site. You want to know more, you may be communicating with me. You can contact through Tamil, or English, or Sinhala.

I am thanking all my website visitors.

Here, Messaged by
Kasi.Jeevalingam.என் அன்பு வருகையாளர்களே!

நான் இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம், மாதகலூரில் வாழ்கிறேன். உளவியல், வழிகாட்டலும் மதியுரையும், இதழியல், தகவல் தொழில்நுட்பம், அமைப்புப் பகுப்பாய்வும் வடிவமைப்பும், இணையத்தள வடிவமைப்பும் மென்பொருள் தயாரிப்பும் எனப் பல எனக்குத் தெரியும். ஆயினும் பட்டப்படிப்பு எதனையும் படித்து முடிக்கவில்லை. உண்மையில் நான் பல பாடங்களில் சிறிதளவு அறிவைப் படித்திருக்கிறேன். நான் படித்ததோ சின்னி விரல் நகத்தளவு அறிவைத் தான். ஆயினும் உலகம் அளவு அறிவைப் படிக்க வேண்டியிருக்கிறதே!

எனது தாய்மொழி தமிழ். ஆனால், எனக்கு ஆங்கிலமும் சிங்களமும் தெரியும். இணைய வழியில் எனது படித்தறிவை, பட்டறிவை, திறமைகளை வெளியிடுகிறேன். உங்களால் எனது வலைப்பூக்களில், வலைத்தளத்தில் பார்வையிடலாம். பின் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். என்னிலோ எனது படைப்புகளிலோ பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். உடனே கண்டிக்கவோ கருத்துக்கூறவோ திருத்திக்கொள்ளவோ வழிகாட்டலும் மதியுரையும் வழங்கவோ உங்களால் முடியும்.

என்னைப் பற்றிக் கொஞ்சம் உங்களுடன் பகிர எடுத்த முயற்சியே இந்த வலைத் தளம். எவராயினும் எனது வலைப்பூக்களைப் படித்த பின், என்னைப் பற்றி அறிய விரும்பலாம், சிறப்பாக எனது யாழ் மென்மொருள் தீர்வுகள் வலைத் தளத்தைப் படித்த பின், என்னைப் பற்றி அறிய விரும்பலாம். ஆகையால், என்னைப் பற்றிய சிலவற்றை உங்களுடன் இங்கு பகிர எண்ணியுள்ளேன். நான் எப்போதும் உங்கள் வேண்டுதல்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

நான், என்னைப் பற்றிய சிலவற்றை உங்களுடன் இப்பக்கத்தில் பகிர விரும்புகிறேன். ஏன் தனியாள் தகவல் மிக முக்கியம்? பொதுவாக ஒவ்வொருவர் தகவலையும் தாம் விரும்பவோ நண்பராகவோ மணமுடிக்கும் நோக்கிலோ விருப்பி மற்றவர்கள் தேடுகின்றனர். உண்மையில் மிக முக்கிய புள்ளிகள் (நீதிபதி, சட்டவாளர், காவற்றுறை, மருத்துவர், ஆசிரியர் போன்றோர் அடுத்தவரைப் பொருட்படுத்துவர்) தமது தேவைகளுக்காக அடுத்தவர் தகவலைத் தேடலாம்.

எனது வலைப்பூக்ளையோ யாழ் மென்பொருள் தீ்ர்வுகள் தளத்தையோ படித்தவர்கள் எவரேனும் என்னைப் பற்றி அறிய விரும்பலாம். ஆகையால், என்னைப் பற்றிய சிறு தகவலைப் பகிர விரும்புகிறேன். அதனால், நீங்கள் என்னை நம்பலாம் அல்லது என் மீது நம்பிக்கை வைக்கமுடியும். உளவியல் நோக்கில் முதலிலேயே வெளிப்படுத்துவது நல்ல வெளியீடாகும். ஆகையால், நான் எனது உளச் செய்திகளையோ உள்ளத்து எண்ணங்களையோ உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அது நீங்கள் என்னோடு நல்லுறவைப் பேண உதவும்.

தொழில் வாய்ப்பில் உயர்ந்த பதவி நிலைக்கு உயரவோ நான் பலரோடு நல்லுறவுகளைப் பேணவோ உதவுமென என்னைப் பற்றிய சிலவற்றை உங்களுடன் பகிருகிறேன். இதனால், நான் எனக்கான நல்ல மக்களாயக் (சமூகக்) கட்டமைப்பைக் கட்டியெழுப்ப முடியும். ஒவ்வொருவரும் எப்போதுமே தங்களுக்கான மக்களாயக் (சமூகக்) கட்டமைப்பிலேயே தங்கி இருக்கின்றனர். எப்போதுமே மக்களாயம் (சமூகம்) ஒவ்வொருவரது ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டுகிறது. எவராயினும் என்மீது நம்பிக்கை வைக்கக்கூடும். அதேவேளை அவர்கள் எனது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடும். பேரறிஞர்கள் தனியாள் தகவலைப் படித்த பின் எனது பிழைகளைத் திருத்தி எனது முன்னேற்றத்திற்கு வழிகாட்டலாம். இது எனது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.

என்னோடு படித்தவர்களோ எனது நண்பர்களோ என்னைப் பற்றிய தகவலைப் படித்த பின், அக்கணம் என்னை அவர்கள் மீட்டுப் பார்க்க முடியும். அதேவேளை மற்றவர்களுக்கும் அதனை மொழிபெயர்த்துக் கூறலாம். அவர்களது உதவி எனது பணிகளுக்குப் பின்னூட்டமாக அமையும். இப்பக்கத்தில் என்னைப் பற்றிச் சிறிதளவே அறிந்திருக்க முடியும். என்னைப் பற்றிய மேலதிக தகவலை அறிய, என்னோடு தொடர்பாடலை மேற்கொள்ளலாம், தமிழிலோ ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ உங்களால் என்னைத் தொடர்புகொள்ள முடியும்.My Webs My Blogs My Stores
http://www.yarlsoft.com/
http://www.yarlsoft.com/ads
http://www.yarlsoft.com/adg
http://cash4u.yarlsoft.com/
http://www.ypvnpubs.com/ https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ
https://app.box.com/s/pjaolpl1kv8ai7n3rf6bq759t99f1u4e
https://app.box.com/s/ungefzhqq9x35llpks3d46y3xcmwuwd6
http://sdrv.ms/1cBgSnf
http://sdrv.ms/1cBgLbn
Professional's Blogs
http://tamilsites.doomby.com/

Copyright © 2019 Kasi.Jeevalingam

Thanks for your visit.

Web Design By Yarlsoft Solutions